2027 ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் டிசம்பர் 16-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள தகவலை தெரிவிக்க வேண்டும்.
டெல்லி அணி ஏற்கனவே டி. நடராஜனை விடுவித்து சுழற்பந்து வீச்சாளர் ஜீசன் அன்சாரியை டிரேடு செய்தது. அதேபோல் குல்தீப் யாதவை விடுவித்து ரிஷப் பண்ட்-ஐ ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான சவுரவ் கங்குலி "நாங்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்களை கவனத்தில் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிராசர் மெக்கர்க் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப் ஆகியோரை ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்கர்க்கை 2024 சீசனின்போது டெல்லி அணி மாற்று வீரராக (காயத்தல் ஒரு வீரர் விலகிய நிலையில் அவருக்குப்பதிலாக) 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. பின்னர் 2025 ஏலத்தில் 9 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அவர் 15 போட்டிகளில் 385 ரன்கள் எடுத்தார். அதன்பின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஷாய் ஹோப் 2024 சீசனில் 75 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்ார். அடுத்த சீசனில் அவரை வெளியிட்டது. ஒரு சீசனில் 9 போட்டிகளில் 183 ரன்கள் எடுத்திருந்தார்.
ஷாய் ஹோப் சமீப காலகமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த மினி ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க பல அணிகள் ஆர்வமாக இருக்கும்.
டெல்லி அணி யுவராஜ் சிங்கை பேட்டிங் பயிற்சியாளராகவும், சமிந்தா வாஸை பந்து வீச்ச பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.