சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணியை டெல்லி அணி 116 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்தூரில் இன்று நடந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பவுலிங் தேர்வு செய்தது.
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்
அதன்படி, முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 68 பந்தில் 19 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 181 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி 18.3 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துஷார் ரஹேஜா 31 ரன்னும், ஷாருக்கான் 30 ரன்னும், ஆண்ட்ரே சித்தார்த் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
திக்வேஷ் ரதி 4 விக்கெட்
டெல்லி அணி சார்பில் திக்வேஷ் ரதி 4 விக்கெட்டும், சுயஷ் சர்மா 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
181 ரன் குவித்த பிரியான்ஷ் ஆர்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அரையிறுதி வாய்ப்பு குறைந்துள்ளது.