அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை இந்தியாவின் தீப்தி சர்மா வென்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென், பாகிஸ்தானின் அராபத் மினாஸ், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதேபோல், சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவின் அன்னபெல் சதர்லேண்ட், வங்கதேசத்தின் சோபனா மோஸ்த்ரே இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் தீப்தி சர்மா வென்றுள்ளார். இவர் சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மா வென்றுள்ளார். இதற்குமுன் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான விருதை அவர் கைப்பற்றியிருந்தார்.
இதேபோல், அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் வென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டு நம்பர் 1 ஆல் ரவுண்டராக முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.