கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசை: பந்துவீச்சில் 2 இடம் முன்னேறிய தீப்தி சர்மா

தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதல் இடத்தில் தொடர்கிறார்.

ஐ.சி.சி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2 இடங்கள் முன்னேறி உள்ளார்.

ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டாப்-10 பட்டியல்

இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

2 இடம் முன்னேற்றம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம், ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தரவரிசையில் 8-வது இடத்திலிருந்த அவர் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்ரீ சரணி முதல் இடம்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதல் இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் சோபி எக்கல்ஸ்டோன் மற்றும் சார்லி டீன் 2, 3 வது இடம் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நான்குலேகோ மிலாபா 4வது இடத்திலும், இங்கிலாந்தின் லாரன் பெல் 5வது இடத்திலும் உள்ளனர்.

டி20 பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 5-வது இடத்திலும், மற்றொரு வீராங்கனை ஷபாலி வர்மா 7-வது இடத்திலும் உள்ளனர்.

SCROLL FOR NEXT