ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களையும் 10 அணிகள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் உள்ள இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேடு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் மற்றொரு அணியும் விருப்பம் தெரிவித்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.
லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக கலீல் அகமதுவை சிஎஸ்கே விடுவிக்க சென்னை விரும்புகிறதாம். ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏற்கனவே டி. நடராஜனை டிரேடு செய்துள்ளது. இருந்தபோதிலும் உறுதியான காம்பினேசனை அந்த அணி உருவாக்கவில்லை. இதனால் எதுவும் நடக்கலாம். லியம் லிவிங்ஸ்டனை விடுவிப்பதா? அல்லது அணியில் தக்கவைத்துக் கொள்வதா? என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் நவம்பர் 17-ந்தேதி தெரிந்துவிடும்.
லியம் லிவிங்ஸ்டனை கடந்த முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 13 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால் 2 போட்டிகளில் 13 ரன்கள் மட்டுமே அடித்ததால் மற்ற போட்டிகளில் களம் இறக்கப்படவில்லை.