கிரிக்கெட்

கடைசி வரை போராடிய வங்கதேசம்: ஒரு விக்கெட்டில் த்ரில் வெற்றி பெற்று ஒயிட்வாஷை தவிர்த்தது ஆஸ்திரேலியா

கூப்பர் கொனோலி 149 ரன்கள் குவிக்க வங்கதேசத்தை ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

வங்கதேசம்- ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. தவ்ஹித் ஹிரோடி 83 ரன்களும், லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், மொசாடெக் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கூப்பர் கொனோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் விளாசி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

45 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. 5 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்படடது.

46-வது ஓவரை ஷொரிபுல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் 2 மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 48-வது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஒரு கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

48 ஓவரில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. 49-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கூப்பர் கொனோலியை (149) வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தஸ்கின் வீசினார். ஆடம் ஜம்பா 3-வது பந்தில் பவுண்டரி அடிக்க, ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 277 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா ஒயிட்வாஷை தவிர்த்தது.

ஷொரிபுல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.