வங்கதேசம்- ஆஸ்திரேலியா தொடர்
கிரிக்கெட்

15 வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா- வங்கதேசம் இடையே ஒருநாள் தொடர்: நாளை மிர்புரில் தொடக்கம்

ஆஸ்திரேலியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிர்புரில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா அணி தலா 3 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ளது. நாளை ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இதன்மூலம் 15 வருடத்திற்குப் பிறகு வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. மேலும், 2-வது முறையாக வங்கதேசம் வென்று கிரிக்கெட் விளையாட இருக்கிறது.

நாளை முதல் போட்டி மிர்புரில் நடக்கிறது. 2-வது போட்டி வருகிற 11-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 14-ந்தேதியும் மிர்புரில்தான் நடக்கிறது.

டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி முடிவடைகிறது. 2-வது போட்டி 19-ல் நடக்கிறது. இந்த போட்டிகள் சட்டோகிராமில் நடக்கிறது.

ஜோஸ் இங்லிஸ் தலைமயிலான ஆஸ்திரேலியா அணி:-

மேட் சார்ட், ஜோஸ் இங்லிஸ், மார்னஜ் லபுசேன், அலேக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ரென்ஷா, ஒல்லி பீக், சேவியர் பார்ட்லெட், மார்ட் குனேமான், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, கூப்பர் கொனோலி, லியாம் ஸ்காட், பென் த்வார்சுயிஸ், டாட் முர்பி.