கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் விலகிய நியூசிலாந்து வீரர்கள்

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் சாப்மன், பாக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. நவம்பர் 1-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.

சாப்மேன், பால்க்‌ஸ் காயத்தால் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து வீரர்கள் மார்க் சேப்மேன், பால்க்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜோஷ் கிளார்க்‌சன், பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள்

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, ஜேக்கப் டபி, பெர்குசன், மேட் ஹென்றி, ஜேக்கப்ஸ், ஜேமிசன், ஆடம் மிலின், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சீபர்ட், நாதன் சுமித், பிளேர் டிக்னர்.

SCROLL FOR NEXT