கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசிய பிரிட்டன் இளவரசர்: வைரலாகும் வீடியோ

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தனர்.

இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசி மகிழ்ந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இந்தியா வருகை தந்தனர்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் முதல்கட்டமாக மும்பை வந்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாடிய வில்லியம்

அவர்கள் மும்பையில் உள்ள சாலையில் சிறுமிகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

அப்போது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உடனிருந்தார்.

இளவரசர் வில்லியமுக்கு ஒரு சிறுமி பந்துவீசி மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, டெண்டுல்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் பந்துவீசினார்.

இவை அனைத்தையும் இளவரசி கேட் மிடில்டன் அருகில் இருந்து கண்டதுடன், அவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அவர்கள் இருவரும் சிறுமிகளுடன் உரையாடியதுடன், குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

வைரலாகும் வீடியோ

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT