ஜிம்பாப்வே அணியின் பிரெண்டன் டெய்லர் ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த நாட்டுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை ஜிம்பாப்வே அணி 99 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிரெண்டன் டெய்லர் 101 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் ஆண்டி பிளவரின் நீண்டகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.
இதற்கு முன் ஆண்டி பிளவர் 6,786 ரன்களுடன் ஜிம்பாப்வே அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தில் இருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் எடுத்த பிரெண்டன் டெய்லர் இந்தச் சாதனையை முறியடித்து (6,837) முதலிடம் பிடித்தார்.
பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 200-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 11 சதம் மற்றும் 39 அரை சதங்கள் அடித்துள்ளார்.