இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 25-ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வே செல்லும் டி20 தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்திய அணியில் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் நடந்த அயர்லாந்து மற்று இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை தழுவியது. மேலும் தொடர்ந்து 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.