அபிஷேக் பொரேல்
கிரிக்கெட்

பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய அபிஷேக் பொரேல், மருத்துவ மாணவிக்கு போலி வாக்குறுதி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர், கடந்த ஜூன் 23-ந்தேதி மோக்ரா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனக்கும் கிரிக்கெட் வீரரான அபிஷேக் பொரேலுக்கும் இடையில் மூன்றரை வருடங்கள் பழக்கம் இருந்தது. நாங்கள் திருமணம செய்து கொள்ள முடிவு செய்தோம். இரண்டு பேரும் வெளிநாட்டிற்கு ஒன்றாக பயணம் மேற்கொண்டுள்ளோம். ஆனால், என்னுடன் தொடர்பு வைத்திருந்ததை பொரேல் மறுக்கிறார் என புகார் அளித்திருந்தார்.

நீதிமன்றம் உத்தரவின் பேரில் கைது

ஆனால், போலீசார் இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அபிஷேக் பொரேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அபிஷேக் பொரேலை நேற்று போலீசாரை கைது செய்தனர். அபிஷேக் பொரேல் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அபிஷேக் பொரேல் கைது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவியின் குற்றச்சாட்டை அபிஷேக் பொரேல் மறுத்துள்ளார்.