கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியில் ஜார்க்கண்டை வீழ்த்தியது பெங்கால்

அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியாக ஆடி 48 பந்தில் 61 ரன் குவித்தார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியால் ஜார்க்கண்ட் அணியை பெங்கால் அணி வீழ்த்தியது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பையில் நடந்த போட்டியில் ஜார்க்கண்ட், பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக விராத் ரெட்டி 45 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் மோகன் 42 ரன் எடுத்தார்.

பெங்கால் அணி சார்பில் முகேஷ்குமார், சயான் கோஷ், ரிஷப் சவுத்ரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கரன் லால் 10 ரன்னில் அவுட்டானார்.

அபிஷேக் போரலுடன், அபிமன்யு ஈஸ்வரன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 பந்தில் 92 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் போரல் 49 ரன்னில் அவுட்டானார்.

அரைசதமடித்த அபிமன்யு ஈஸ்வரன்

பொறுப்புடன் ஆடிய அபிமன்யு ஈஸ்வரன் அரை சதம் கடந்தார். அவர் 48 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், பெங்கால் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT