கிரிக்கெட்

நியூசிலாந்துடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் நீக்கம்

2வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாட அங்குள்ள இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சும், வேகப்பந்து வீச்சாளர்

அட்கின்சனும் சர்ச்சையில் சிக்கினர். விடுதியில் உள்ளூர் ரக்பி வீரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டது அம்பலமானது.

அணி வீரர்களுக்கான கட்டுப்பாட்டை மீறி அவர்கள் விடுதிக்குச் சென்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிந்து, கடும் கோபத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன் அதிரடியாக நீக்கப்பட்டனர். பொறுப்பு கேப்டனாக ஜோ ரூட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டன் காக்ஸ் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.