பார்தீவ் படேல்
கிரிக்கெட்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவி: டுவிஸ்ட் வைத்த பார்தீவ் படேல்

அஜித் அகர்கருக்கு பதிலாக பார்தீவ் படேல் நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

மேற்கு மணடலம் சார்பில் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு பார்தீவ் படேல் விண்ணப்பம் செய்வார் என எதிர்பார்க்கப்படட நிலையில், அவர் விண்ணப்பிக்கவில்லை.

இந்திய கிரிக்கெட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்திய சீனியர் அணியை தேர்வு செய்ய இந்த ஐந்து மண்டலங்களில் இருந்து ஒரு உறுப்பினர் (முன்னாள் வீரர்) தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதில் எந்த உறுப்பினர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதோ, அவரை தலைமை தேர்வாளராக பிசிசிஐ நியமிக்கும்.

அகர்கர் பதவி நிறைவு

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அகர்கர் தலைமை தேர்வாளராக (Selector) இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பிரக்யான் ஓஜா தற்போது தற்காலிகமாக தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

மேற்கு மணடலத்தில் இருந்து தேர்வாளரை தேர்வு செய்ய பிசிசிஐ விண்ணப்பம் கோரியிருந்தது. மும்பையைச் சேர்ந்த பார்தீவ் படேல் விண்ணப்பம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் விண்ணப்பித்திருந்தால், தலைமை தேர்வாளராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளது.

தலைமை தேர்வாளராக நீடிக்கும் ஓஜா

விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள். பார்தீவ் படேல் கடைசி நாள் வரைக்கும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் பிசிசிஐ காலக்கெடுவை நீடிக்குமா? என்று தெரியவில்லை. ஒருவேளை நீடிக்கவில்லை என்றால், ஓஜா அவரது பதவிக்காலம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புள்ளது.

ஜூனியர் அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சமீர் திகே, ரமேஷ் பவார் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சீனியர் அணி தேர்வுக்குழு உறுப்பினர் ஆவார்களா? என்பது தெரியவில்லை.

பார்தீவ் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணி சப்போர்ட் ஸ்டாஃப் ஆக உள்ளார். மேலும், வர்ணனையிலும் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர விரும்பியதால், தேர்வுக்குழு தலைவர் பதவியை விரும்பாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT