கிரிக்கெட்

பாண்ட்யா, கோலி அதிரடி: 196 ரன்களை குவித்தது இந்தியா

முதலில் ஆடிய இந்திய அணி 196 ரன்களைக் குவித்தது. இந்திய அணியின் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.

மாலை மலர்

ஆன்டிகுவா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.