வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 170 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் 2-1 என ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான பிரியன் பென்னட் 30 பந்தில் 44 ரன்னும், ரியான் பர்ல் 25 பந்தில் 30 ரன்னும் சேர்த்தனர்.
வங்கதேசம் சார்பில் நஹித் ரானா 4 விக்கெட்டும், முகமது சயிபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்குகிறது.