தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் தோல்வி அடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் சரிவைக் கண்டது.
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்து, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் தோல்வி அடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் சரிவைக் கண்டது.
தென் ஆப்பிரிக்க அணி 77.78 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்தது.
ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்து அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 50 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி 38.54 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 5வது இடம்பிடித்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் ஒரு இடம் சரிந்து 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் 36.67 சதவீத புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 7 முதல் 9 வரையிலான இடத்தில் உள்ளன.