ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய வெஸ்லி மாதேவீர் அரை சதமடித்து 75 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பிராட் இவான்ஸ் அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது வங்கதேச அணி. தொடக்க ஆட்டக்காரர்களான தன்ஜித் ஹசன் தமிம், சவுமியா சர்க்கார் ஜோடி அசத்தலாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்த நிலையில் சவுமியா சர்க்கார் 69 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்ஜித் ஹசன் தமிம் 94 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வங்கதேசம் 36 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆனாலும், ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணி 2-0 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது தன்ஜித் ஹசன் தமிமுக்கும், தொடர் நாயகன் விருது பிராட் இவான்சுக்கும் அளிக்கப்பட்டது.