பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர். மஹமுதுல் ஹசன் ஜாய் 8 ரன்னிலும், ஷட்மான் இஸ்லாம் 13 ரன்னிலும் வெளியேறினர்.
3வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுடன் மொமினுல் ஹக் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஷாண்டோ சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொமினுல் ஹக் 91 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் வங்கதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹீம் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.