வங்கதேசம்- ஆஸ்திரேலியா தொடர் வங்கதேசம்- ஆஸ்திரேலியா தொடர்
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேசம்

வங்கதேசம்- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைப்பற்றியுள்ளது.

நாளை 3-வது ஒருநாள் போட்டி

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை மிர்புரில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் வங்கதேசம் களம் இறங்க இருக்கிறது.

முதல் போட்டியில் வங்கதேசம் 86 ரன்களில் வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 284 ரன்கள் குவித்தது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 42.2 ஓவரில் 278 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வங்கதேசம் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 42 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேச அணிக்கு 41 ஓவரில் 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்கதேசம் 35 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.