கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்

ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷட்மன் இஸ்லாம் சதமடிக்க வங்கதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. ஹசன் தமிம் 7 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம், மொமினுல் ஹக் ஜோடி 50 ரன் சேர்த்த நிலையில் மொமினுல் ஹக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். ஹொசைன் ஷாண்டோ 19 ரன்னில் அவுட்டானார்.

தவ்ஹித் ஹிருதோய் 42 ரன் எடுத்திருந்த ரிடயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம்-தவ்ஹித் ஹிருதோய் ஜோடி 88 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னரே நிறுத்தப்பட்டது. முதல் நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 74 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. ஷட்மன் இஸ்லாம் 99 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஷட்மன் இஸ்லாம் சதமடித்து 105 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 34 ரன்னில் வெளியேறினார். காயத்தால் வெளியேறிய ஹிருதோய் 42 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 97.4 ஓவரில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப், ஜோஷ்வா பிஷப் தலா 2 விக்கெட்டும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT