கிரிக்கெட்

ஷட்மன் இஸ்லாம் அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் டெஸ்ட்-வங்கதேசம் முதல் நாள் முடிவில் 213/3

ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் ஷட்மன் இஸ்லாமின் அசத்தலான ஆட்டத்தால் வங்கதேசம் 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. ஹசன் தமிம் 7 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம், மொமினுல் ஹக் ஜோடி 50 ரன் சேர்த்த நிலையில் மொமினுல் ஹக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஷட்மன் இஸ்லாம் அரை சதம்

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

ஹொசைன் ஷாண்டோ 19 ரன்னில் அவுட்டானார். தவ்ஹித் ஹிருதோய் 42 ரன் எடுத்திருந்த ரிடயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

வெளிச்சமின்மையால் தடைபட்ட ஆட்டம்

4வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம்-தவ்ஹித் ஹிருதோய் ஜோடி 88 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னரே நிறுத்தப்பட்டது.

இறுதியில், முதல் நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 74 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஷட்மன் இஸ்லாம் 99 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 2 விக்கெட்டும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT