கிரிக்கெட்

CSK-யில் நாதன் எல்லிஸ்க்கு பதிலாக தென்ஆப்பிரிக்கா வீரர் அல்ல, ஆஸ்திரேலியா வீரர்

நாதன் எல்லிஸ்க்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பார்ட்மேனை ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது

மாலை மலர்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. 10 அணிகளும் தொடருக்கு தயாராகி வரும் நிலையில் சில வீரர்கள் காயத்தால் அணியில் இருந்து விலகி வருகிறார்கள். இது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பார்ட்மேனை ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்பென்சர் ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என ஐபிஎல் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.