ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி இந்த முறை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் களம் காண இருக்கிறது. இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஐ.பி.எல். தொடரில் இம்பேக்ட் சப் (impact sub) விதி உள்ளது. இது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த விதி இருப்பதால் அணிகள் சிறந்த பேட்ஸ்மேன் அல்லது சிறந்த பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகறது. ஆல்-ரவுண்டரை பொறுத்த வரையில், அவர்களுடைய இடத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. என்றாலும் விதி விதிதான். அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.
டி20 உலகப் கோப்பையை வென்ற பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பினேன்" என்றார்.