கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தார் அக்சர் படேல்

இந்தியாவின் அக்சர் படேல் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பர்மிங்ஹாமில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் அக்சர் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 45.2 ஓவரில் 262 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அக்சர் படேல், வாஷிங்டன் ஜோடி அசத்தலாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், ஐசிசி வெளியிட்ட ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அக்சர் படேல் 3 இடங்கள் முன்னேறியுள்ளார். இதன்மூலம் டாப் 10 பட்டியலுக்குள் அவர் நுழைந்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர் தரவரிசையில் 12வது இடத்தில் இருந்த அக்சர் படேல் 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் அக்சர் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 பேட்மேன்ஸ்கள் தரவரிசையில் இந்தியாவின் இஷான் கிஷன் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா 2வது இடத்திலும் உள்ளனர். திலக் வர்மா 2 இடங்கள் சரிந்து 8-வது இடத்தில் நீடிக்கிறார்.

SCROLL FOR NEXT