கிரிக்கெட்

அதிரடி காட்டிய ரசல்- ரூதர்போர்ட் ஜோடி: ஆஸ்திரேலியாவுக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார்.

பெர்த்:

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கினர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 79 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. சார்லஸ் 4, மேயர்ஸ் 11, பூரன் 1, சேஸ் 37, பவல் 21 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். குறிப்பாக ஆடம் ஜாம்பா ஓவரை விளாசி தள்ளினர்.

குறிப்பாக ஜாம்பா 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரி வழங்கினார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது.

SCROLL FOR NEXT