டாம் பாண்டன்- ஜோர்டன் காக்ஸ்
கிரிக்கெட்

டாம் பாண்டன் சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 356 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

ஜோ ரூட், ஜோர்டன் காக்ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 131 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு

இந்த நிலையில் 2-வது போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசு்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜோ ரூட் அரைசதம்

டாம் பாண்டன், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பென் டக்கெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். பாண்டன்- ஜோ ரூட் ஜோடி அபாரமாக விளையாடியது. ஜோ ரூட் அரைசதம் அடித்த நிலையில் 68 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் போட்டியில் அவருடைய 50-வது அரைசதம் ஆகும். இதன்மூலம் 50 அரைசதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

டாம் பாண்டன் சதம்

மறுமுனையில் டாம் பாண்டன் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 99 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹாரி ப்ரூக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஜோர்டன் காக்ஸ் உடன் வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. காக்ஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 45 ஓவரில் 300 ரன்களை தொட்டது.

ஜோர்டன் காக்ஸ் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார்.

இங்கிலாந்து 355 ரன்கள் குவிப்பு

சாம் கர்ரன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, வில் ஜேக்ஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் அட்கின்சன் 2 சிக்சர்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்துள்ளது. வில் ஜேக்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

SCROLL FOR NEXT