ஆடம் ஜம்பா  
கிரிக்கெட்

ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா - இலங்கைக்கு எதிரான போட்டியில் இடமில்லை

டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

மாலை மலர்

பெர்த்:

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.