கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

முதல் அரையிறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்குகிறது.