கிரிக்கெட்

2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.

சதமடித்த டிராவிஸ் ஹெட்

2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார். கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பிராட் இவான்ஸ் 3 விக்கெட்

ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.

அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 45 ரன்னும், பிரெண்டன் டெய்லர் 39 ரன்னும், கிரெய்க் எர்வின் 38 ரன்னும், இன்னசன்ட் காலா 34 ரன்னும், பென் கர்ரன் 30 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 48.3 ஓவரில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன்

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேசில்வுட், கூப்பர் கானலி, ஆடம் ஜாம்பா, மாட் ரென்ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT