இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.4 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 29 ரன் எடுத்தார். வில் ஜாக்ஸ், டாம் பாண்டன் 25 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மாலி பியர்ட்மேன் 6 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மிட்செல் மார்ஷ் 30 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார். கூப்பர் கனோலி 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜோஷ் இங்லீஸ் 23 ரன்னும், மேட் ரென்ஷா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.