வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.
ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.