ஹேசில்வுட்
கிரிக்கெட்

வங்கதேச டெஸ்ட் தொடருக்காக தயாராகும் ஹேசில்வுட்..!

வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் முதல் இன்னிங்சில் 263 ரன்களும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் 355 ரன்களும் அடித்தன. பின்னர் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 54 ரன்களில் சுருண்டது.

முதல் டெஸ்ட் 13-ந்தேதி தொடங்குகிறது

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 13-ந்தேதி டார்வினில் உள்ள மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தயாராகி வருகிறார். இதற்காக தீவிரமாக பந்து வீச்சு பயிற்சியில் ஈடுட்படு வருகிறார்.

2-வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் ஆகஸ்ட் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

வங்கதேச தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம்:-

டிராவிஸ் ஹெட், லபுஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித், ஜேக் வெதலால்டு, கேமரூன் க்ரீன், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, ஹேசில்வுட், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க்.