மற்ற அணிகள் மாறுபட்ட ஆடுகளங்களை தயார் செய்யத் தொடங்கினால் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என அஸ்வின் எச்சரித்துள்ளார்.
இந்திய டி20 அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து டி20 உலக கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.
தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் டி20 அணி கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் இந்திய டி20 அணி முதன்முதலாக அயர்லாந்து சென்றது. அதன்பின் இங்கிலாந்து சென்றது. இந்தத் தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.
அதன்பின் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. இந்திய டி20 அணி ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஜப்பானுக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடியது. இந்த போட்டி மழையால் 5 ஓவராக குறைக்கப்பட்டது. கத்துக்குட்டி அணியான ஜப்பானுக்கு எதிராக இந்தியா 5 ஓவரில் குறைந்தது 50 ரன்களாவது அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 32 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இருந்போதிலும் ஜப்பானை 30 ரன்களில் கட்டுப்படுத்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் சிறப்பாக பேட்டிங் செய்கிறது. அதேவேளையில் பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருந்தாலே, திணறி வருகிறது. ஜப்பான் போட்டியே இதற்கு தகுந்த சான்றாகும்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய பேட்டிங் குறித்து கூறியதாவது:-
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாவிட்டால், இந்தப் பேட்டிங் வரிசைக்கு சிக்கல் ஏற்படலாம். ஐபிஎல் (IPL) போட்டிகளை சாதகமான ஆடுகளங்களில் விளையாடி இந்திய அணி மிகவும் பழகிவிட்டது. எனவே, மற்ற அணிகள் மாறுபட்ட ஆடுகளங்களை தயார் செய்யத் தொடங்கினால் அது இந்திய பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும்.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஷிவம் துபே ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர்.