ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. கடந்த 2025-26 சீசனில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வென்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் மோதுகின்றன.
இரண்டாவது டெஸ்ட் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை லார்ட்ஸ் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 8 முதல் 12 வரையும், நான்காவது டெஸ்ட் ஜூலை 21 முதல் 25 வரை சவுத்தாம்ப்டனிலும், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை தி ஓவல் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.