சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் பிப்ரவரி மாத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் அருந்ததி ரெட்டி வென்றார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் சாய்த்தார்.
முதல் போட்டியில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 2-வது போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3-வது மற்றும் கடைசி போட்டியில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
சிறந்த வீரருக்கான விருதை சஹிப்சதா பர்ஹான் வென்றுள்ளார். இவர் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையில் பர்ஹான் 7 போட்டிகளில் 383 ரன்கள் குவித்தார். சராசரி 76.60 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 160.25 ஆகும். ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை பர்ஹான் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.