ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் லீக் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிரடி வீரரான ஆர்யவீர் சேவாக் 22 ரன்னில் அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 86 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு அர்ஜுன் ராஜ்புத் உடன் மானல் சவுகான் இணைந்து பொறுப்புடன் ஆடி 64 ரன்கள் சேர்த்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சிறப்பாக ஆடிய அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து அசத்தினார். அவர் 85 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி 35.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது.