கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: காயத்தால் மொமினுல் ஹக் விலகல்

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் மொமினுல் ஹக் பீல்டிங் செய்தபோது தலையில் காயம் ஏற்பட்டது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக மொமினுல் ஹக் விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

மொமினுல் ஹக்

இந்நிலையில், வங்கதேச அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் மொமினுல் ஹக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் பீல்டிங் செய்தபோது தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்குப் பதிலாக ஜாகர் அலி களமிறங்கினார்.

அவருக்குப் பதிலாக வலதுகை பேட்ஸ்மேனான அமிட் ஹசனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் வங்கதேச அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT