கிரிக்கெட்

தலையில் பந்து தாக்கியதன் எதிரொலி: 2வது டெஸ்டில் இருந்து ஆகாஷ் தீப் விலகல்

இந்தியாவின் ஆகாஷ் தீப் 5 விக்கெட் வீழ்த்தியதுடன், 29 ரன்னும் எடுத்தார்.

நியூசிலாந்து உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், தலையில் பந்து தாக்கியதால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரலின் அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

ஆகாஷ் தீப் 5 விக்கெட்

இந்தியாவின் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.

ஆகாஷ் தீப் விலகல்

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், தலையில் பந்து தாக்கியதன் காரணமாக போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வீசிய ஒரே ஓவரில், அடுத்தடுத்த 2 பவுன்சர்கள் ஆகாஷ் தீப்பின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. ஆனாலும், அவர் துணிச்சலுடன் தொடர்ந்து பேட்டிங் செய்து 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸ் முடிவில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் மூளை அதிர்வு இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அவர் இப்போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, தலையில் அடிபடும் வீரருக்குப் பதிலாக அதே போன்ற திறனுடைய மாற்று வீரரை களமிறக்கலாம். அதன்படி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக பிரசித் கிருஷ்ணா களமிறங்க நடுவர்கள் அனுமதி வழங்கினர்.

SCROLL FOR NEXT