இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது பாகிஸ்தானில் அணியில் இருந்து நீக்கப்பட்ட சல்மான் ஆகா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் ஏழு வீரர்கள் நீக்கப்பட்டனர். இதில் சல்மான் ஆகா மற்றும் உஸ்மான் ஆகியோரும் அடங்குவர்.
இந்த நிலையில் இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா பசல், அலி உஸ்மான், அராபத் மின்ஹாஸ், அசன் அவைஸ், முகமது அப்பாஸ், காசி கோரி, முகமது சுலேமான், முகமது தஹா, ரசாயுல்லா, சாத் பைக், சல்மான் அலி ஆகா, சமீரு் மின்ஹாஸ், சாத் ஷகீல், முகமது தஹா.
சல்மான் ஆகா முதல் தர போட்டியில் டிரிபிள் செஞ்சுரி விளாசினார். இதனால் இலங்கை அணியில் இடம் கிடைத்துள்ளது.
புதுமுக வீரர் முகமது தஹா உள்நாட்டு தொடரில் 7 போட்டிகளில் 730 ரன்கள் அடித்துளளார். இதில் 3 சதங்கள் அடங்கும். சுலேமான் 3 சதங்கள் அடித்துள்ளார்.