ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 15 வயதான சூர்வன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 776 ரன்கள் குவித்து தொடர் நாயகன் (ஆரஞ்ச் கேப்) விருதை தட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். தற்போது இலஙகையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடி வருகிறது.
இவரது இளைய சகோதரர் ஆசிர்வாத் சூர்யவன்ஷி. இவரும் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவர் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார். அண்ணன் அதிரடி ஆட்டக்காரர் என்றால், இவர் சற்று நிதானமாக விளையாடக்கூடியவராக இருப்பார் போல. 87 பந்தில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 103 ரன்கள் அடித்துள்ளார்.
தொடர் நாயகன் விருது உடன் MVP விருது, அதிக சிக்சர் போன்ற விருதுகளையும் கைப்பற்றினார்.