ஜிம்பாப்வே அணி
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: கடைசி நாள் 275 ரன்கள் அடிக்குமா ஆப்கானிஸ்தான்?

கடைசி நாளில் 275 நாட்கள் அடிப்பது கடினம்.

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 339 ரன்கள் சேர்த்தது. பிரெண்டன் டெய்லர் 119 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் பவுலர் நசீர் கான் மரூஃப்கி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217

பின்னர் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களில் ஆல்அவுட் ஆனார். அஃப்சர் ஜஜாய் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் வின்சென்ட் மசெகெசா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 295/9 டிக்ளேர்

பின்னர் 112 ரன்களுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது, பிரெண்டன் டெய்லர் 50 ரன்களும், முசாரபானி 59 ரன்களும், கிரிமர் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஆப்கானிஸ்தானுக்கு 418 ரன் இலக்கு

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 418 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல் மாலிக் (8), ரஹ்மானுல்லா (15), செதிகுல்லா அடல் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரஹ்மத் ஷா 30 ரன்கள் சேர்த்தார். ஹஸ்மதுல்லா ஷாஹிதி 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு அஃப்சர் ஜஜாய் உடன் இக்ராம் அலிகில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் 4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு கடைசி நாளில் 275 ரன்கள் தேவை

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 275 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. கடைசி நாளில் 275 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையெனில் நாள் முழுவதும் தாக்குப்பிடிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை செய்வது ஆப்கானிஸ்தானுக்கு கடினம். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

SCROLL FOR NEXT