கிரிக்கெட்

சுழற்பந்து வீச்சு மூலம் வரலாறு எழுதுவோம்: ஆப்கானிஸ்தான் கேப்டன் நம்பிக்கை..!

ரஷித் கான் தலைமையிலான சுழற்பந்து வீச்சு குழுவுடன் இந்தியாவை வீழ்த்துவோம் என ஆப்கானிஸ்தான் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர அடுத்த வரும் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னெடுப்பை அனைத்து நாடுகளும் முன்னெடுத்து வருகிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருடன் உலக கோப்பைக்கான தயார்படுத்துதலை தொடங்குகிறது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தரம்சாலாவில் தொடங்குகிறது. இந்திய அணி வலுவானது. ரஷித் கான் தலைமையிலான சுழற்பந்து வீச்சு மூலம் இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைப்போம் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ஹஷ்மதுல்லா ஷாஹிதி கூறியதாவது:-

எங்களுக்கு இந்த (தரம்சாலா) கிரவுண்டில் விளையாடிய அனுபவம் உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக 2023-ல் கடைசியாக இங்கு விளையாடினோம். அதை இன்னும் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். இந்திய கண்டிசனில், மிகவும் ஹாட்டாக இருக்கும்போது பெரும்பாலும் சுழற்பந்து விக்கெட்டுகளாக இருக்கும். அதனால் எங்களுயைட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்தியா கடினமான அணி

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா கடினமான எதிரணி என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு முன்னேறினர். இங்கே இருந்து நாங்கள் உலக கோப்பை பயண்தை தொடங்குகிறோம். எந்த அணியும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது என்பதை இன்னும் காட்டவில்லை. நாங்கள் இன்னும் 7-வது தரவரிசையில் உள்ளோம்.

இவ்வாறு ஹஷ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், ஏ.எம். கசன்ஃபர், முகமது நபி ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் உள்ளனர்.