கிரிக்கெட்

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: ஆப்கானிஸ்தான் வெல்ல 170 ரன்களை நிர்ணயித்தது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

ஷார்ஜாவில் இன்று இறுதிப்போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 43.3 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட்டானார். ரியான் பர்ல் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், பரூக்கி, பிலால் சமி, மொகமது நபி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT