கிரிக்கெட்

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: நாளை ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மோதல்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

ஷார்ஜாவில் நேற்று 3வது லீக் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேசம் 41.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஸ்மதுல்லா ஒமர்சாய், யாமின் அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஹமத் ஷா-ஹஸ்மதுல்லா ஷாஹிடி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ஆப்கானிஸ்தான் 35.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்நிலையில், வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஹ்மத் ஷா பேசியதாவது:

இலக்கையும் கைவசம் உள்ள விக்கெட்டுகளையும் கருத்தில் கொண்டு பொறுமையாக விளையாடுவதே எங்கள் திட்டம்.

எங்களிடம் நேரம் இருக்கும்போது முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க முயற்சிப்போம். வாய்ப்பு கிடைக்கும்போது பவுண்டரிகளை அடிப்பதுடன், ஒன்று மற்றும் இரண்டு ரன்களாக எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருப்போம். இதுதான் எங்களுடைய அணுகுமுறை.

பவர்பிளே ஓவர்களில் நிலையான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்பினோம்.

எதிரணி தாக்குதல் பாணியில் பந்துவீசினாலும், அதனைச் சமாளித்து விக்கெட்டுகளைப் பாதுகாப்பதுடன் தொடர்ந்து ரன்களைக் குவிப்பதே திட்டம்.

மோசமான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தோம். மற்ற நேரங்களில் ஸ்ட்ரைக்கை மாற்றி ரன்களைச் சேர்க்கிறது. இவ்வாறு தொடர்ந்து ரன்களை எடுப்பது எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

நாளை இறுதிப்போட்டி

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT