ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா, செடிகுல்லா அடல் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3வது விக்கெட்டுக்கு பிரெண்டன் டெய்லர்-பிரியன் பென்னட் ஜோடி 137 ரன் சேர்த்தது.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய பிரெண்டன் டெய்லர் சதமடித்து 131 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய பிரியன் பென்னட் சதமடித்தார். பிரியன் பென்னட் 128 ரன்னிலும், வெஸ்லி மாதேவீர் 54 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் மொகமது சலீம், குவாயிஸ் அகமது தலா 3 விக்கெட்டும், ஜியா உர் ரகுமான் அக்பர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல் மாலிக் 2 ரன்னில் அவுட்டானார்.
செடிகுல்லா அடல் உடன் ரஹ்மானுல்லா இணைந்தார். இந்த ஜோடி பொறுமையுடன் ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.
சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா ஆகியோர் தலா 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.