கிரிக்கெட்

2-வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி, தொடரை கைப்பற்றி அசத்தல்

இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் 57 ரன்களை விளாசினார்.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்:

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். 2-ஆவது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா அடல் ஜோடி 51 ரன் சேர்த்த நிலையில் ஜட்ரன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின், வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது. 7-ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி, ரஷித் கான் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடி 28 பந்தில் 48 ரன்களை சேர்த்தது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், நிதிஷ்குமார் ரெட்டி விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்தியா வெற்றி:

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 34 ரன்களை எடுத்தார். 14.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் இஷான் கிஷன் 38 ரன்களும், திலக் வர்மா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT