அடில் ரஷித்
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் இருந்து அடில் ரஷித் விலகல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அடில் ரஷித் விலகியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் அடில் ரஷித் இடம் பெறவில்லை. காயம் காரணமாக இந்த தொடர் முழுவதும் இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி இன்று துர்காமில் நடைபெற்று வரும் நிலையில், ஹெட்டிங்லீயில் 2-வது போட்டி நடைபெற்றது. 3-வது போட்டி ஞாயிற்றுக்கிழமை ஓவலில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக அடில் ரஷித் இருந்து வந்தார். இவரது காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

அடில் ரஷித் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து வெற்றி பெற்ற உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார். இன்றைய போட்டியில் இங்கிலாந்து 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT