இந்திய அணியின் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்தது.
ஷ்ரேயாஸ் அய்யர் 68 ரன்னும், அபிஷேக் சர்மா 59 ரன்னும் எடுத்தனர்.
முதல் பாதி முடிந்தபின் மழை பெய்ததால் இரண்டாம் பாதி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 24 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 59 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் 4 சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மேலும், இந்த 100 சிக்சர்களை அடிக்க குறைவான பந்துகளை எடுத்துக் கொண்ட சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் 789 பந்துகளில் 100 சிக்சர்களை அடித்திருந்த நிலையில், அவரது சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
அபிஷேக் சர்மா 785 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.